உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

வேன் மோதி ஆப்ரேட்டர் பலி

காங்கயம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 55; நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர். இவரது மகன் தமிழரசன், 27 பெருந்துறை சிப்காட்டில் பாய்லர் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தமிழரசனும், அவரதுஉறவினர் சக்தி, 40. இருவரும் டூவீலரில் நத்தக்காடையூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வேன், டூவீலர் மீது மோதியது. இருவரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி தமிழரசன் இறந்தார். காரில் வந்த, மூன்று பேரும் லேசான காயத்துடன் தப்பினர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பணம் கேட்டு மிரட்டிய ஆறு பேர் கைது

திருப்பூர் வளம் பாலம் அருகே உள்ள இடத்தின் உரிமையாளர் வீரக்குமார், 60. இவர் தனது இடத்தை பார்க்க சென்றார். அங்கு வந்த ஆறு பேர், மதுபாட்டிலில் குத்தி விடுவதாக மிரட்டி பணம் கேட்டு தாக்கினர். இதுகுறித்து புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் பிரவீன்குமார் 29, ஜெயராஜ், 28, அரவிந்த்குமார், 26, மோகன்ராஜ், 37, சபரிநாதன், 25 மற்றும் சரவணன், 27 என, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

சிகிச்சை பலனின்றி தொழிலாளி பலி

திருப்பூர், வெங்கமேட்டை சேர்ந்த செல்வராஜ் மகன் பெரியசாமி, 22. பொங்கலுாரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த, 4ம் தேதி மாலை கோவை செல்வதற்காக வேலை முடிந்து, கோவில்பாளையம் அருகே பைக்கில் சென்றார். அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆட்டோ விபத்து: மூதாட்டி பலி

கேரளாவை சேர்ந்தவர் கந்தசாமி, 59, இவர் நேற்று அதிகாலை சரக்கு ஆட்டோவில் சேலம் சென்று கொண்டிருந்தார். அருகில் அவரது மனைவி பாரதி, 56, மற்றும் பேரன் தீனதயாளன், 26, அமர்ந்திருந்தார். ஆட்டோ தேசிய நெடுஞ்சாலை ஈட்டி வீரம்பாளையம் அருகே சென்றபோது, அதே வழியில் வந்த வந்த சரக்கு வேன் மோதியது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த பாரதி, 56, இறந்தார். காயம் அடைந்த கந்தசாமி, தீனதயாளன் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து, பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி