உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

வேன் மோதி தொழிலாளி பலி

ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்தவர் சின்னப்பா, 50. இவர் கடந்த, ஒரு ஆண்டாக காங்கயம், பரஞ்சேர்வழியில் கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் காங்கயம் ரோடு நல்லிகவுண்டன் வலசு பிரிவு அருகே நடந்து சென்றார்.அவ்வழியாக வந்த வேன் அவர் மீது மோதியது. அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் சின்னப்பா இறந்தது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

3 கிலோ 'குட்கா' பொருள் பறிமுதல்

மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சின்னகாளிபாளையம் பார்க் அருகில் கண்காணித்தனர். டீ வியாபாரம் செய்து வந்த இடுவம்பாளையத்தை சேர்ந்த ரவிசந்திரன், 56 என்பவரிடம் சோதனை செய்தனர். மூன்று கிலோ குட்கா பொட்டலம் வைத்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.

வாகனம் மோதி தொழிலாளி பலி

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், வேலகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 52; கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, காடையூரான் வலசு பிரிவு அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.விபத்தில் படுகாயமடைந்த முருகேசனை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

வலி நிவாரணி மாத்திரை பறிமுதல்

வீரபாண்டி போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். ராமாபுரம், இரண்டாவது வீதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவரிடம் போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருப்பது தெரிந்தது.இதுதொடர்பாக, வீரபாண்டி, வள்ளலார் நகரை சேர்ந்த கார்த்திக், 21 என்பவரை கைது செய்து, 150 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருப்பூர் மாவட்டம், அணைப்பாளையம், மாமரம் பஸ் ஸ்டாப்பை சேர்ந்தவர் செல்வன், 25. கடந்த 24ம் தேதி இரவு மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. அதனை சரி செய்ய செல்வன், மீட்டர் பாக்ஸ் அருகில் உள்ள பியூஸ் காரியரை கழற்றி மாட்டும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அதில், மயக்கமடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை