உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

டூவீலர் மோதி தொழிலாளி பலி வெள்ளகோவிலை சேர்ந்தவர் முருகேசன், 55. கட்டட தொழிலாளி. இரு நாள் முன் முருகேசன், காங்கயம் ரோடு அருகே ரோட்டை கடக்க முயன்றார். அவ்வழியாக வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். தவறி விழுந்து தொழிலாளி பலி வெள்ளகோவில், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 55. கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மயில்ரங்கத்தில் உள்ள ஒரு வீட்டில் சிமென்ட் ஷீட் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். கிணற்றில் குதித்து தற்கொலை திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, தொட்டிய மண்ணரையை சேர்ந்தவர் தன்ராஜ், 28, டெய்லர். இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை வீட்டுக்கு அருகே இருந்த கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை