குற்றங்களை குறைக்க போலீஸ் ரோந்து பீட் முறை அறிமுகம்: 24 மணி நேர கண்காணிப்பு தீவிரமாகிறது
திருப்பூர்-திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் குற்றச் சம்பவங்கள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீஸ் ரோந்து 'பீட்' முறை அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில், வடக்கு பகுதியில், 12 மற்றும் தெற்கு பகுதியில் 10 என மொத்தம் 22 போலீஸ் பீட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 24 மணி நேரமும் தலா இரு போலீசார் ஒவ்வொரு பீட்டுக்கு உரிய பகுதியிலும் இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து ரோந்து சுற்றி வருவர்.பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் மற்றும் தகவல்கள் குறித்து உடனுக்குடன் நேரில் சென்று விசாரணை நடத்துவது; குற்றச் செயல்கள் நடைபெறாமல் பாதுகாப்பது, சமூக விரோத நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர்.ரோந்துக்குப் பின், பகுதிவாரியாக அனைத்து பீட் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள அவுட் போஸ்ட்களில் அந்த போலீசார் பணியாற்றுவர். பொதுமக்கள் ஏதேனும் பிரச்னைகள், புகார்கள் இருப்பின் அங்கு சென்றும், அவுட் போஸ்ட் தொடர்பு எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.பீட் மற்றும் மொபைல் எண்கள் விவரம்:-------------------------------மாஸ்கோ நகர் - 89259 61490புது பஸ் ஸ்டாண்ட்-89259 61491கருணாகரபுரி- 89259 61492 குளத்துப்பாளையம் - 89259 61493ஏவிபி கல்லுாரி சந்திப்பு -89259 61494வளையன்காடு-89259 61495எஸ்.ஏ.பி., சந்திப்பு -89259 61496ஸ்ரீநகர் -89259 61497போயம்பாளையம் -89259 61498பாண்டியன் நகர் -89259 61499அம்மாபாளையம் -89259 61500கணியாம்பூண்டி -89259 61501பெரிய தோட்டம் -89259 61502சந்திராபுரம் -89259 61503சந்தைப் பேட்டை -89259 61504கொடிக்கம்பம் -89259 61505பெரியாண்டிபாளையம் -89259 61506கோவில்வழி -89259 61507நல்லுார் -89259 61508காசிபாளையம்-89259 61509டி.கே.டி., மில் - 89259 61510முருகம்பாளையம் - 89259 61511இது புதுமை
'அவுட் போஸ்ட்' திறப்பு
'டெடிகேடட் பீட்' திட்டத்தில், மாநகர போலீஸ் எல்லையில் போலீஸ் அவுட் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து நேற்று முதல் இந்த அவுட் போஸ்ட்களும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.கே.வி.ஆர். நகரில் அமைக்கப்பட்டுள்ள அவுட் போஸ்ட்டை, துணை கமிஷனர் கிரிஷ் யாதவ் திறந்து வைத்தார். உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.