உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடைகளுக்கு எமனாகும் பாலிதீன்!

கால்நடைகளுக்கு எமனாகும் பாலிதீன்!

பொங்கலுார்; பொங்கலுார் பகுதியில், பாலிதின் குப்பையில் உள்ள கழிவுகளை கால்நடைகள் உண்பதால், உடல் பாதிப்புக்கு அவை ஆளாக நேரிடுகிறது.திருப்பூர் மற்றும் பல்லடம், பொங்கலுார் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பை பெரிதும் நம்பியுள்ளனர்.ஊரகப் பகுதிகளில் பாலிதீன் கழிவுகள் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. ஊராட்சி நிர்வாகங்கள் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றன; அதற்கான தொழிலாளர்களும் இல்லை.பொது இடங்களிலும், தெரு ஓரங்களிலும் துாக்கி எறியப்படும் பாலிதீன் கழிவுகள், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன. காய்கறி மற்றும் உணவு கழிவுகள் பாலிதீன் கவரில் போட்டு துாக்கி வீசப்படுகின்றன.அதிலிருந்து வரும் வாசனையால் ஈர்க்கப்படும் கால்நடைகள், பாலதீன் கழிவுகளில் உள்ள உணவுகளை உட்கொள்கின்றன. அதனுடன் பாலிதீன் பைகளும் அவற்றின் வயிற்றுக்குள் செல்கின்றன. இவற்றை உட் கொள்ளும் கால்நடைகளின் குடலில் கழிவுகள் தேங்கி, உணவு உட்கொள்ள முடியாமல் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்தும் விடுகின்றன. இது விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்துகிறது.எனவே, விவசாய நிலம், பொது இடங்களை பாலிதீன் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக பராமரிக்க அரசு முன்வர வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை