உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா இன்று துவக்கம்

கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா இன்று துவக்கம்

அனுப்பர்பாளையம் : திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் ஊராட்சியில் உள்ள, கோட்டை முனியப்பன் சுவாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.அடுத்த மாதம் 7ம் தேதி சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் நிகழ்ச்சி; 8ம் தேதி அவரப்பாளையத்தில் இருந்து, சக்தி கரகம் படைக்கலம் கோவிலுக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கோட்டை முனியப்பனை வழிபடுவர். அன்று மதியம் 2:00 மணி முதல், கோட்டை முனியப்பன் சேவா அறக்கட்டளை மற்றும் தொரவலுார், அவரப்பாளையம் தர்ம சாஸ்தா அய்யப்ப சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடக்கிறது.வரும் 11ம் தேதி மஞ்சள் நீராடுதல், மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை