உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் பண்டிகை நிறைவு இயல்புநிலை திரும்பியது

பொங்கல் பண்டிகை நிறைவு இயல்புநிலை திரும்பியது

திருப்பூர், ; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, 17ம் தேதி விடுமுறை அறிவித்தது. இதனால், 14ம் தேதி துவங்கி, 19 வரை தொடர்விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தால், கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருப்பூர் பகுதியில் இயங்கும், பல்வேறு தொழிற்சாலைகளும் நேற்று விடுமுறை முடிந்து, வழக்கமான இயக்கத்துக்கு திரும்பின. பனியன் நிறுவனங்கள் மற்றும் சார்ந்துள்ள 'ஜாப் ஒர்க்' தொழிற்சாலைகளில் மட்டும், முழுமையான இயக்கம் வரவில்லை.தொடர் விடுமுறை முடிந்து, பெரிய நிறுவனங்கள் மட்டும் நேற்று திறக்கப்பட்டன. வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றினர். வெளியூர் சென்றவர்களும், சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர், நேற்று முதல் திருப்பூர் திரும்ப துவங்கி விட்டனர். நாளை மாலைக்குள் வந்து விடுவர் என்பதால், அனைத்து நிறுவனங்களும், 20ம் தேதி முதல் வழக்கமான இயக்கத்துக்கு வரும். தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டதால், திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ரோடுகள், மீண்டும் பரபரப்பான இயக்கத்துக்கு திரும்பின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ