உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

திருப்பூர், ; திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் எதிரே உள்ள, ஸ்ரீசத்தி மாரியம்மன் கோவிலில், 57ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று நடந்தது.கடந்த, 24ம் தேதி கிராமசாந்தியுடன் விழா துவங்கியது; 25ல் பொரி மாற்றுதல், கணபதி ேஹாமம், 26ம் தேதி கம்பம் நடுதல், கும்பம் எடுத்துவருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், அம்மன் படைக்கலம், பட்டு எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று, அதிகாலை மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், பிள்ளையார் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை, பக்தர்கள் வழிபட்டனர்.மாலையில், கம்பம் எடுக்கப்பட்டது; இன்று, மஞ்சள் நீர் விழா மற்றும் அம்மன் திருவீதி உலாவும், மதியம், 11:00 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரம் மற்றும் அன்னதானம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை