மேலும் செய்திகள்
ஊட்டியில் பேன்சி கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
11-Sep-2025
திருப்பூர்; அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியது மற்றும் பொது இடத்தில் குப்பை கொட்டியது போன்ற செயல்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்தது. திருப்பூர், மங்கலம் ரோடு, 43வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நகைக்கடை சார்பில் விளம்பர போஸ்டர் ஒட்டும் பணி நடந்தது. மாநகராட்சி சுகாதார பிரிவினர், அந்த போஸ்டர்களை பறிமுதல் செய்து, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதேபோல், 53வது வார்டுக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் ஒரு சரக்கு ஆட்டோ குப்பை கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதற்கு கொண்டு வந்தது. அந்த வாகனத்துக்கு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வி ளம்பரங்கள் செய்வது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
11-Sep-2025