முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், சுற்றுலாவியல், புள்ளியியல், கணிதம், வேதியில்ல இயற்பியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 160 பேர் சேர்க்கை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள இடங்களில் சேர்க்கை பதிவு செய்வது குறித்து கல்லுாரி நிர்வாகத்தில் அறிந்துகொள்ளலாம். இத்தகவலை, கல்லுாரி பொறுப்பு முதல்வர் மலர்வண்ணன் தெரிவித்தார்.