பலத்த காற்றுக்கு சாய்ந்த மின்கம்பங்கள்
திருப்பூர்; பலத்த காற்றுவீசியதால், வெள்ளியங்காடு பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.திருப்பூர் நகரப்பகுதியில், நேற்று மாலை, 4:00 மணி அளவில், மழை பெய்தது. திடீரென மழை பெய்து, பலத்த காற்று வீசியது. இந்நிலையில், வெள்ளியங்காடு அருகே உள்ள, ஒரு மின்கம்பம் திடீரென சாய்ந்தது. இதனால், அருகே இருந்த மூன்று மின்கம்பங்களும், ஒரு டிரான்ஸ்பார்மரும் சாய்ந்தன.மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து, பணியாளர் குழுவினர் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்; உடைந்த கம்பங்களுக்கு மாற்றாக, புதிய கம்பங்கள் பொருத்தப்பட்டன.l திருப்பூர், திரு.வி.க., நகரில் மரம் முறிந்து விழுந்து, ரோட்டில் விழுந்தது. வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில், அடுத்தடுத்து நின்றிருந்த வேப்பமரங்கள் முறிந்து விழுந்தன. முத்தையன் கோவில் அருகே ஒரு வீட்டின் மேற்கூரை தகரம் காற்றில் பறந்தது.