அழகோவியம் தீட்டிய மாணவருக்கு பாராட்டு
திருப்பூர்: மத்திய பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதி, நஞ்சப்பா பள்ளியில் நுாலக சுவர் உட்பட பல பகுதிகளில் அழகிய ஓவியம் தீட்டிய நிப்ட்-டீ கல்லுாரி மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.ஊத்துக்குளி ரோட்டில் டி.எம்.எப்., சுரங்கப்பாலத்தினுள், திருப்பூரின் பின்னலாடை தொழில் வளர்ச்சியை விளக்கும் வகையிலான ஓவியங்களை தீட்டியுள்ளனர். இந்தியாவிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதை ஓவியம் என்கிற சாதனைக்காக, இந்த டூடுல் ஓவியத்தை லிம்கா புக் ஆப் ரெக்கார்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.பொது இடங்களில் ஓவியம் தீட்டிவரும் இக்கல்லுாரி மாணவர்களுக்கான பாராட்டு விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு சான்று வழங்கினர். நிப்ட்-டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம், கல்லுாரி தலைவர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.