மேலும் செய்திகள்
மாவட்ட விளையாட்டு வரும் 6ம் தேதி துவக்கம்
27-Sep-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை பத்து நாட்கள் நடத்த மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தனிநபர், குழு விளையாட்டுகளில் திறமையான வீரர், வீராங்கனையரை தேர்வு செய்ய, குறுமைய, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் நாளை (6ம் தேதி) துவங்குகிறது. திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளியில் செஸ் போட்டி, 6ல் நடக்கிறது. 7ம் தேதி டீ பப்ளிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ், புல்வெளி டென்னிஸ் போட்டி, உடுமலை சார்க் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்குவாஷ் நடக்கிறது. 15 வேலம்பாளையம், டிரிக் அகாடமியில், வரும், 8ம் தேதி இருபாலருக்கான நீச்சல், நிப்ட்-டீ கல்லுாரியில் மாணவியர் டேக்வாண்டோ போட்டி நடக்கிறது. இதே கல்லுாரியில், 9ம் தேதி, மாணவர் டேக்வாண்டோ போட்டி, நஞ்சப்பா பள்ளியில் மாணவ, மாணவியர் கேரம், சிக்கண்ணா கல்லுாரியில் சைக்கிளிங் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும், 10ம் தேதி ஜிம்னாஸ்டிக்ஸ் - நஞ்சப்பா பள்ளியில், அதே நாளில் சிலம்பம் 'நிப்ட் - டீ' கல்லுாரியில் நடக்கிறது. 13ம் தேதி, வித்யவிகாசினி பள்ளியில், மாணவருக்கு டென்னிகாய்ட், நிப்ட்-டீ கல்லுாரியில், வாள்சண்டை, 14ம் தேதி, நஞ்சப்பா பள்ளியில், குத்துச்சண்டை, வித்யவிகாசினி பள்ளியில், மாணவியருக்கு டென்னிகாய்ட் போட்டி நடக்கிறது. மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில், 15ம் தேதி, இருபாலருக்கான பேட்மின்டன் போட்டி ஆகியன நடைபெற உள்ளன.
27-Sep-2025