உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு மருத்துவக்கல்லுாரி அட்மிஷனுக்கு தயாராகிறது

அரசு மருத்துவக்கல்லுாரி அட்மிஷனுக்கு தயாராகிறது

இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு, நாடு முழுதும், மே 4ம் தேதி நடந்தது. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, மாணவர் சேர்க்கைக்கு தயாராகி வருகிறது.கல்லுாரி நுழைவு வாயிலில், எம்.பி.பி.எஸ்., 100 இடங்கள்(நான்கரை ஆண்டு படிப்பு, ஒரு ஆண்டு கட்டாய மருத்துவ பயிற்சி); நர்சிங், டி.ஜி.என்.எம்., படிப்பு, 100 இடங்கள்(மூன்றாண்டு); டிப்ளமோ இன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி; டிப்ளமோ இன் ரேடியோ டையக்னோசிஸ் டெக்னாலஜி தலா பத்து இடங்கள்(இரண்டு ஆண்டு; மூன்று மாதம் பயிற்சி) மற்றும் சான்றிதழ் படிப்பு குறித்த விபரம் அறிவிப்பாக வைக்கப்பட்டுள்ளது.மே, 4ல் திருப்பூர் மாவட்டத்தில், ஏழு மையங்களில், 'நீட்' தேர்வு நடந்தது. 3,105 பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் தேர்வர்கள், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியை கவுன்சிலிங்கில் தேர்வு செய்யக்கூடும்; பார்வையிட வரக்கூடும் என்பதால், பெற்றோர் அறிந்து கொள்ள மருத்துவமனை நுழைவு வாயிலில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பத்மினி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை