உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செவ்வந்தி  பூ விலை உயர்வு

செவ்வந்தி  பூ விலை உயர்வு

திருப்பூர்; ஆடி மாதத்துக்கு முன்னதாகவே காற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பூ வரத்து குறைய துவங்கியுள்ளது.வழக்கமாக, திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு, 500 - 700 கிலோ செவ்வந்தி வரும் நிலையில், தற்போதைய காற்றின் வேகம் காரணமாக பூக்கள் உதிர்ந்த விடுவதால், 400 கிலோவுக்கும் குறைவாகவே செவ்வந்தி பூக்கள் வருகிறது. இதனால், ஒரு கிலோ செவ்வந்தி, 260 ரூபாய்க்கு விற்றது.வழக்கமாக முல்லை பூ விலையை விட செவ்வந்தி விலை குறைவாக இருக்கும். செவ்வந்தி வரத்து குறைவால், விலை உயர்ந்துள்ளது. முல்லை கிலோ, 240 ரூபாய்க்கு விற்றது. கோவில் விசேஷங்கள், முகூர்த்த சீசன் துவக்கத்தால், மல்லிகை 400 - 450 ரூபாயாக உள்ளது. வரும் நாட்களில் வரத்து ஏற்ப விலை இருக்கும் என பூ வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை