உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் கோப்பை போட்டி: அரசு பள்ளி மூன்றாமிடம்

முதல்வர் கோப்பை போட்டி: அரசு பள்ளி மூன்றாமிடம்

அவிநாசி : முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், அவிநாசி அரசு ஆண்கள் பள்ளி அணி மூன்றாமிடம் பெற்றது.முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், அவிநாசி அருகேயுள்ள பழங்கரை டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளி மற்றும் எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 58 பள்ளி அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, 3ம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமாரி, உடற்கல்வி ஆசிரியர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ