உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் தனியார் நிறுவனம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் தனியார் நிறுவனம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் : ''திருப்பூர் மாவட்டத்தில், மின்னணு பயிர் கணக்கீடு (டிஜிட்டல் சர்வே) பணி மேற்கொள்ள, தகுதியுள்ள நிறுவனத்தினர், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,'' என, கலெக்டர் மனீஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டத்தில், மின்னணு பயிர் கணக்கீடு பணி கடந்த, 2024, ராபி பருவம் முதல் நடந்து வருகிறது. இந்த கணக்கீட்டின் போது, பயிர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பாசன முறை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த விவரங்களை புகைப்படத்துடன் செயலி வாயிலாக, இணைய தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், ஆண்டுக்கு மூன்று முறை, அதாவது, காரிப், ராபி மற்றும் கோடை பருவங்களில் இந்த மின்னணு பயிர் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு, (2025 -2026) மின்னணு பயிர் கணக்கீடு பணி, ஒப்பந்த நிறுவனத்தினர் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது. ஒப்பந்த பணியாளர் நிறுவனம், மாவட்ட அளவிலான தேர்வுக்குழு வாயிலாக, வரையறுக்கப்பட்ட விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்படும். விருப்ப முள்ள நிறுவனங்கள் விரிவான விவரங்களுடன் பங்கேற்கலாம். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வேளாண்மை பட்டதாரி, பட்டய படிப்பு படித்தவர் அல்லது பிற பட்டப்படிப்பு படித்தவர்கள், இணைய தளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி பயன்படுத்த தெரிந்தவர்கள், இக்கணக்கீட்டு பணியை மேற்கொள்ளலாம். ஒப்பந்த நிறுவனங்கள், தகுதியுள்ள இளைஞர்களை அந்தந்த கிராமங்களில் பணியாளர்களாக தேர்வு செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், 350 கிராமங்களில் மின்னணு பயிர் சர்வே பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சர்வே எண்கள் பதிவு மேற்கொள்வதன் அடிப்படையில், ஒரு சர்வே எண்ணுக்கு, 2 சதவீதம் சேவை வரி உட்பட, 20 ரூபாய் வழங்கப்படும். திருப்பூர் கலெக்டர் தலைமையிலான குழு, ஒப்பந்த பணியாளர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர்கள், ஆக., 1ம் தேதி முதல், மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும். தகுதியுள்ள நிறுவனத்தினர், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு தபாலில் விண்ணப்பிக்க வேண்டும். அன்றைய தினமே (30ம் தேதி) கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும்.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம், 350 வருவாய் கிராமங்களுக்கும் ஒரு நபர் வீதம், 350 பணியாளர்களை தேர்வு செய்து, பட்டியல் தர வேண்டும். இப்பணியை, எவ்வித தொய்வுமின்றி, உரிய பயிர் பருவ காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Vijayakumar
ஜூலை 29, 2025 11:18

Need contact number


M Vijayakumar
ஜூலை 29, 2025 11:17

எப்படி விண்ணப்பிப்பது? Name of the organisation? Mode of salary distribution? Is possible to do near by district peoples?


M Vijayakumar
ஜூலை 29, 2025 11:13

சம்பாதிக்க நல்ல ஒரு வாய்ப்பு


சமீபத்திய செய்தி