உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் காஸ் நிறுவனங்கள் முறைப்படுத்த வேண்டும்

தனியார் காஸ் நிறுவனங்கள் முறைப்படுத்த வேண்டும்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவிலான, காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இண்டன் மற்றும் எச்.பி., காஸ் நிறுவன அலுவலர்கள், காஸ் ஏஜன்சி பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.வெளிமாவட்டத்தில் இயங்கும் தனியார் காஸ் நிறுவனங்கள், நீண்ட துாரம் வந்து, விதிமுறைகளை மீறி காஸ் சிலிண்டர் வினியோகம் செய்கின்றனர்; தனியார் காஸ் நிறுவனங்களையும் வரன்முறைப்படுத்த வேண்டுமென பலரும் பேசினர்.நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் பேசுகையில், ''வெளிமாவட்டத்தில் இருந்து, தனியார் காஸ் சிலிண்டர் திருப்பூருக்கு அதிகம் வருகின்றன. சரியான எடையில் வழங்காமல், நுகர்வோரை ஏமாற்றுகின்றனர். தனியார் மற்றும் அரசு பொதுநிறுவன சிலிண்டர்களும், எடை சரிபார்த்து வழங்கப்படுவதில்லை.ஓட்டல், பேக்கரிகளில், விதிமுறையை மீறி, அதிக அளவு காஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்படுகின்றன. அரசு மானியத்தில் வழங்கும் சிலிண்டர்களும், சில நேரம் பில் இல்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது.காஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பாக, அரசு அதிகாரிகள் ஆய்வு எதுவும் நடத்தாததால், பல்வேறு முறைகேடுகளும், விதிமீறல்களும் நடக்கின்றன.விபத்து அபாயம் இருப்பதால், தனியார் காஸ் சிலிண்டர் வினியோகத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை