ஏ.வி.பி., பள்ளியில் பரிசளிப்பு விழா
திருப்பூர்; திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது. தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றினார். முதல்வர் பிரியாராஜா வரவேற்றார். கடந்த 2023-24ம் கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்ற 68 மாணவர்களுக்கு பொள்ளாச்சி, அஜய் பேப்பர் மில் பழனியப்பன் கேடயம் வழங்கினார். இந்தக் கல்வியாண்டில் வகுப்பு வாரியாக முதல் மூன்று இடம்பிடித்த மாணவர்கள், நுாறு சதவீதம் வருகைப்பதிவுடன் வந்த மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கோவை, ஏ.பி.டி., நிறுவன முதுநிலை பொது மேலாளர் சிவக்குமார் சான்றிதழ், கேடயம் வழங்கினார். விளையாட்டுப்போட்டிகளில் வென்றோருக்கு ஏ.வி.பி., அறக்கட்டளை அறங்காவலர் பிரதாப், சேனாபதி நல்லம்மை ஐ.டி.ஐ., அறங்காவலர் விக்னேஷ் சம்பத் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.மொத்தம் 1,600 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு நன்றி கூறினார்.