உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலக்கிய மன்ற விழா மாணவர்களுக்கு பரிசு

இலக்கிய மன்ற விழா மாணவர்களுக்கு பரிசு

உடுமலை; உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழன்னை இலக்கிய மன்ற விழா நடந்தது.விழாவை பள்ளி முதல்வர் மாலா துவக்கி வைத்தார். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் கார்த்திக்குமார் தலைமை வகித்தார். இலக்கிய மன்ற விழாவில் கண்காட்சியும் நடந்தது.அதில், 40 வகையான மூலிகை செடிகள், 99 வகையான பூக்கள், சிற்றிலக்கியங்கள், ஐவகை நிலங்கள், தமிழ் ஆண்டுகளின் பெயர்கள், 64 கலைகளின் வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை