உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சகோதயா பள்ளிகளுக்கான விளையாட்டு வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கல்

சகோதயா பள்ளிகளுக்கான விளையாட்டு வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கல்

உடுமலை: உடுமலை அருகேயுள்ள- கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், கோவை சகோதயா பன்னாட்டு பள்ளிகளுக்கிடையேயான, 45-வது எறிபந்து போட்டிகள் நடந்தது.இதில், 17 பள்ளிகளைச்சேர்ந்த, 23 அணிகள் பங்கேற்றன. இப்போட்டிகளில், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில், கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி முதலிடத்தையும், யுனைடெட் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், விஷ்வா சிஷ்யா வித்யாலயா பள்ளி மூன்றாம் இடத்தையும், ஏ.ஆர்.பி., இன்டர் நேஷனல் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றது.அதே போல், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், நவபாரத் நேஷனல் பள்ளி முதலாமிடத்தையும், உடுமலை நேஷனல் மாடல் பள்ளி, இரண்டாமிடத்தையும், விஷ்வா சிஷ்யா வித்யாலயா பள்ளி மூன்றாம் இடத்தையும், ஜி.ஆர்.டி., பப்ளிக் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றது.19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், கோவை -நேஷனல் மாடல் பள்ளி முதலாமிடத்தையும், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி இரண்டாம் இடத்தையும், நவ பாரத் நேஷனல் பள்ளி மூன்றாம் இடத்தையும், நொய்யல் பப்ளிக் பள்ளி நான்காம் இடத்தையும் பெற்றன.இப்போட்டிகளில், ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை, கோவை நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி தட்டிச்சென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு, நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி இயக்குனர் பானுமதி, முதல்வர் கவிதா உள்ளிட்டோர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி