உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு பரிசு தொகை

மாணவர்களுக்கு பரிசு தொகை

திருப்பூர்; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அம்பேத்கர், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 16 பேர்; தமிழ்நாடு விழாவுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 6 மாணவர்கள் என, 22 பேருக்கு, மொத்தம் ரூ.92 ஆயிரத்துக்கான செக் மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், இயற்கை மரணமடைந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 60 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஆகியவற்றை, கலெக்டர் மனிஷ் நாரணவரே வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை