உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆங்கிலத்தில் தேர்ச்சி அதிகம் தமிழ் பாடத்தில் குறைந்தது

ஆங்கிலத்தில் தேர்ச்சி அதிகம் தமிழ் பாடத்தில் குறைந்தது

திருப்பூர் : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் ஆங்கில பாடத்தை விட, தமிழில் அதிகம் பேர் தேர்ச்சி பெறாதது தெரிய வந்துள்ளது.தேர்ச்சி சதவீதம், தமிழில், 98.91; ஆங்கிலம், 99.81. கணிதம், 97.45. அறிவியல், 97.86. சமூக அறிவியல், 98.14. ஆங்கிலத்தில், 55 பேர் தேர்ச்சி பெறவில்லை; தமிழில், 320 பேர் தேர்ச்சி பெறவில்லை. அதிகபட்சமாக, கணிதத்தில், 750 பேர் தேர்வாகவில்லை. அறிவியலில், 631 பேரும், சமூக அறிவியல் பாடத்தில், 549 பேரும் தேர்வாகவில்லை.தமிழில், 238 மாணவர், 82 மாணவியர், ஆங்கிலத்தில், 39 மாணவர், 16 மாணவியர், கணிதத்தில், 443 மாணவர், 307 மாணவியர், அறிவியலில், 404 மாணவர், 227 மாணவியர், சமூக அறிவியலில், 375 மாணவர், 174 மாணவியர், என, 631 பேர் தேர்ச்சி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை