திட்டப் பணிகள் துவக்கம்
காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட பரஞ்சேர் வழி, ஆலம்பாடி, சிவன்மலை, படியூர் மற்றும் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு திட்டம், ஊரக வேலை உறுதி திட்டம், 15வது நிதிக்குழு மானியம், ஊராட்சி பொது நிதி, கனிமம் மற்றும் சுரங்க நிதி திட்டங்களில், மொத்தம் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளை அமைச்சர்சாமிநாதன் துவக்கிவைத்தார்.ஆலம்பாடியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம்; சிவன்மலை ஊராட்சி சரவணா நகரில் புதிய வணிக வளாகம்; படியூர் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்; ரேஷன் கடை, ஒட்டப்பாளையத்தில் அங்கன்வாடி கட்டடம் என, 1.31 கோடி ரூபாய் மதிப்பில் முடிவடைந்த கட்டடங்களை திறந்துவைத்தார்.