வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வரியை எப்ப குறைப்பார்கள்
திருப்பூர், நவ. 29-திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தி, அ.தி.மு.க., - த.மா.கா., மற்றும் தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த கம்யூ., மற்றும் காங்., கவுன்சிலர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.கட்சியினர் கருத்துகள் வருமாறு:* செந்தில்குமார், காங்.,:சொத்து வரி உயர்வு தொடர்பாக, மக்களை பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மன்ற கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய தொழில் நிலை திருப்பூரில் மோசமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரி உயர்வு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.* ரவிச்சந்திரன், இந்திய கம்யூ.,:மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, ஜி.எஸ்.டி., வரி ஆகியன பின்னலாடைத் தொழில் உள்ளிட் சிறு, குறு நிறுவனங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. விலைவாசி உயர்வு அனைத்து தரப்பையும் வெகுவாக பாதித்துள்ளது. மாநில அரசு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் சொத்து வரியை உயர்த்தியுள்ளது. கடந்த 2022ல் மறு சீராய்வு என உயர்த்தி, தற்போது மீண்டும் 6 சதவீதம் உயர்த்தியுள்ளனர்.சொத்து வரியை மின் இணைப்பு அடிப்படையில் மாற்றம் செய்வது; குப்பை வரி உயர்வு; தாமதத்துக்கு அபராதம் போன்றவை திரும்பபெற வேண்டும்.* அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி தலைவர்:மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் மந்த நிலை உள்ளது. மக்கள் பல வகையிலும் தினமும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு குறித்து சிறப்பு கூட்டம் நடத்தி, அனைத்து கட்சியினர் கருத்துகள் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுகுறித்த கடிதங்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. மன்ற கூட்ட விவாதத்திலும் சரி, கோரிக்கை கடிதங்கள் மீதும் நடவடிக்கை இல்லை.* சாந்தாமணி, ம.தி.மு.க.,:சொத்து வரி உயர்வு ரத்து குறித்து எங்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைமை உத்தரவு காரணமாக போராட்ட நடவடிக்கையில் நாங்கள் பங்கேற்கவில்லை.* தங்கராஜ், பா.ஜ.,:திருப்பூரில் தொழில் நிலை சற்று தடுமாற்றமாக உள்ளது. சொத்து வரி உயர்வு என்பது அனைத்து தரப்பையும் பாதிக்கும். இதை ரத்து செய்ய வேண்டும் என மன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கான சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:மத்திய அரசின் உத்தரவுப்படி, சொத்து வரி உயர்த்தப்பட்டால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரம் கிடைக்கும். இந்த நெருக்கடி காரணமாக மாநில அரசு இதை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு என்பது யார் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.மேலும், திருப்பூருக்கு மட்டும் என எந்த வரியும் தனிப்பட்ட முறையில் உயர்த்தப்படவில்லை. இன்றைய கூட்டத்தில் சொத்து வரி குறித்த எந்த தீர்மானமும் வரவில்லை. பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் கொண்டு வரப்படும் நிலையில், அதை மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில், விளக்கம் அளிக்கப்படும் என்ற கருத்தையும் ஏற்காமல் அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். தேர்தலை மனதில் வைத்து, கபட நாடகத்தை அவர்கள் நடத்தியுள்ளனர்.
வரியை எப்ப குறைப்பார்கள்