உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம்; கிராம மக்கள் ஆவேசம்

காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம்; கிராம மக்கள் ஆவேசம்

உடுமலை; குடிநீர் தட்டுப்பாட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து, பார்த்தசாரதிபுரம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எலையமுத்துார் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.உடுமலை ஒன்றியம், எலையமுத்துார் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பார்த்தசாரதிபுரம். இக்கிராமத்துக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இத்திட்டத்தில், தேவையான அளவு வினியோகம் இல்லை; உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்களிலும் இருந்தும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் முற்றிலுமாக இல்லை. பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று காலை பார்த்தசாரதிபுரத்தில், எலையமுத்துார் - குமரலிங்கம் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.காலிக்குடங்களுடன், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், அவ்வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.தகவல் கிடைத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.

பராமரிப்பில் அலட்சியம்

திருமூர்த்தி அணையிலிருந்து மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தனியாக கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டத்தில் தொடர் பிரச்னைகள் ஏற்பட்டு, திட்டம் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், மடத்துக்குளத்துக்கான புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், பல கிராமங்களுக்கு பழைய கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் வாயிலாகவே குடிநீர் வினியோகிக்கின்றனர்.இக்குழாய் பல இடங்களில் அடிக்கடி உடைந்து, ஒட்டுமொத்த வினியோகமும் பாதிப்பது குறிப்பிடதக்கதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை