அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; தமிழக அமைச்சர் பொன்முடி, ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ஹிந்து மதச் சின்னங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் வேதனையையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியது.பல தரப்பினரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் எழுந்து வருகிறது.இதனை வலியுறுத்தி, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஹிந்துமுன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, கலைவாணி, நிர்மலா, வசந்தி, நளினி, பாரதி, அனிதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அம்சவள்ளி நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஹிந்து அன்னையர் முன்னணியினர், பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.