உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 50வது வார்டு குமாரசாமி காலனி யில் பல ஆண்டுகளாக தார் ரோடு இல்லாமல் உள்ளது. இந்த ரோட்டை பல்வேறு பள்ளி மாணவர்கள் தினமும் பயன் படுத்துகின்றனர்.குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் நீர் தேங்கியும், ரோடு மேலும் மோசமாகியும் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வுகாண வலியுறுத்தி, கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி, கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காங்கயம் ரோடு, பகுதியில் தெற்கு தோட்ட கிளை எஸ்.டி.பி.ஐ., சார்பில், மாநகராட்சி உருவ பொம்மையை பாடையில் வைத்து போராட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக் தலைமை வகித்தார், தொழிற்சங்க தலைவர் சித்திக், செயற்குழு உறுப்பினர் திப்புசுல்தான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி, பங்கேற்ற வர்கள் கோஷமிட்டனர். பணிகளை செய்ய தாமதித்தால், போராட்டம் தீவிரமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ