இலவச பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
உடுமலை; இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், மடத்துக்குளம் நால்ரோட்டில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் குமரலிங்கம் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மா.கம்யூ., தாலுகா செயலாளர் வடிவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், குமரலிங்கம் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், கொழுமம், குப்பம்பாளையம், சமத்துவபுரம் பகுதியில், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர்.போதிய வருவாய் இல்லாத இத்தொழிலாளர்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, கடந்தாண்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. குமரலிங்கம் சுற்றுப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.