உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரிசை கட்டும் போராட்டங்கள்

வரிசை கட்டும் போராட்டங்கள்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.திருப்பூர் மாநகராட்சியில் 25 முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டு அக்., முதல் மார்ச் வரையிலான நிதியாண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு மற்றும் தாமதக் கட்டணமாக ஒரு சதவீத அபராதமும் விதிக்கப்படுகிறது.'சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்; இது குறித்து ஆலோசிக்க சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்' என்பதை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. 'மாநகராட்சி அலுவலகம் முன்புறம் இன்று 3ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும்'' என, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க.,நாளை ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தே.மு.தி.க., சார்பில் நாளை 4 ம் தேதி மாலை 3:00 மணிக்கு, மாநகராட்சி சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

த.மா.கா., 7ம் தேதி உண்ணாவிரதம்

திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா., சார்பில் வரும், 7ம் தேதி, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மாநகராட்சி அலுவலகம் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அதன் மாநகர மாவட்ட தலைவர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள்இன்று ஆலோசனை

சொத்து வரி உயர்வு, வாடகை கட்டடங்களுக்கான ஜி.எஸ்.டி., வரி விதிப்பு போன்றவற்றால் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து விரிவாக விவாதிக்கவும், இது தொடர்பாக தமிழக அரசை அணுகுவது, போராட்டம் நடத்தி கவனத்தை ஈர்ப்பது உள்ளிட்ட யோசனைகள் வர்த்தர்கள் மத்தியில் உள்ளது. அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், இன்று ஆலோசனைக் கூட்டம், பல்லடம் ரோட்டிலுள்ள ரமணாஸ் ஓட்டல் மேல் மாடியில், மாலை 4:00 மணிக்கு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !