உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவருக்கு கல்வி உபகரணம் வழங்கல்

மாணவருக்கு கல்வி உபகரணம் வழங்கல்

திருப்பூர் : திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் சுவாமி விவேகானந்தரின், 123வது நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை சிறப்பு ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சியில், விவேகானந்தர் வாழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மன ஒருமைப்பாடு, தியானம், உடல் வலிமை, மன வலிமை, தெய்வ பக்தி, தேச பக்தி, பிரம்மச்சரியம், ஒழுக்கம், பரந்த ஞானம், ஏழைகளின் மீது பரிவு, கலாசாரம், பண்பாடு, அபரிதமான ஆளுமைத் திறன், அஞ்சாமை, வாழ்க்கைக் கல்வி, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை போன்ற அருமையான குணாதிசயங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சேவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், அறங்காவலர் ஜோதிலட்சுமி மற்றும் பூர்ணமாலா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை