உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளுக்கு பழச்செடி, விதை வழங்கல்

விவசாயிகளுக்கு பழச்செடி, விதை வழங்கல்

திருப்பூர் : தமிழக அரசு சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு, பழச்செடி தொகுப்பு மற்றும் பயறு வகை தொகுப்புகளை கலெக்டர் மனிஷ் நாரணவரே வழங்கினார்.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், மரதுவரை, காராமணி மற்றும் அவரை பயறு வகைகள் தொகுப்பு , 3,000 விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடிகள், 30 ஆயிரத்து, 500 விவசாயிகளுக்கும், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை வகை, கொத்தவரை உள்ளிட்ட காய்கறி விதை தொகுப்பு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் என, 83 ஆயிரத்து, 500 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.வேளாண்துறை சார்பில், 10 விவசாயிகளுக்கு, மரதுவரை, காராமணி, அவரை உள்ளிட்ட பயறு தொகுப்புகள் வழங்கப்பட்டது.தோட்டக்கலைத்தறை சார்பில், கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட பழச்செடிகள் தொகுப்பும், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை வகைகள் காய்கறி விதை தொகுப்புகளையும், விவசாயிகளுக்கு, கலெக்டர் வழங்கினார்.வேளாண் துணை இயக்குனர் பாமாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் புனிதவேணி, வேளாண் அலுவலர் சுகன்யா உட்பட, ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !