கல்லுாரி மாணவிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
உடுமலை: உடுமலை அருகே, எழுமின் அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்லுாரி மாணவிக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. உடுமலை மலையாண்டிகவுண்டனுார் கிராமத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி காவ்யா, இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச்சேர்ந்த இம்மாணவி, செமஸ்டர் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்று வருகிறார். இவர் தனது படிப்புக்கு உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். இதையடுத்து, மாணவிக்கு லேப்-டாப் மற்றும் டேபிளை எழுமின் அறக்கட்டளை சார்பில், அதன் தலைவர் டாக்டர் துரைமுருகன் வழங்கினார். சமூக சேவகர்கள் சரவணன், வீரக்குமார், கோபிநாத், சக்தி, மகுடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.