பொதுமக்களிடம் குறைகேட்பு
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், கவுண்டம்பாளையம் ஊராட்சி புதுகாலனியில் கனவு இல்லம் கட்டும் பணி, அணைப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி உள்ளிட்டவற்றை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களிடம் குறைகேட்டு, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.