உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிழற்குடை திறப்பு விழா பொதுமக்கள் வரவேற்பு

நிழற்குடை திறப்பு விழா பொதுமக்கள் வரவேற்பு

திருப்பூர், ; திருப்பூர், மங்கலம் ரோட்டில், மாநகராட்சி, 39வது வார்டு லிட்டில் பிளவர் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி முன் ரோட்டரி திருப்பூர் ஆனந்தம் சார்பில், அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.இதில், ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு தலைமை வகித்து நிழற்குடையை திறந்து வைத்து பயணிகள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.வார்டு கவுன்சிலர் சாந்தி வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், துணை கவர்னர் ஹரிசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ரோட்டரி திருப்பூர் ஆனந்தம் தலைவர் உமாகாந்த், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் முருகானந்தம் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.நிழற்குடை திறக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, ரோட்டரி நிர்வாத்துக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை