மேலும் செய்திகள்
ஓரத்துல கொஞ்சம் ரோட்டை காணோம்!
22-Nov-2024
அனுப்பர்பாளையம்; அங்கேரிபாளையத்தில் இருந்து, பிச்சம்பாளையம் செல்லும் மூன்று ரோடு சந்திப்பு பகுதியின் கீழ் செல்லும் சாக்கடை கால்வாயில் தொடர் மழையின் போது, அடைப்பு ஏற்பட்டது. ரோட்டில் குளம் போல் கழிவுநீர் தேங்கியது. போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், ரோட்டை தோண்டி கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்தனர்.ரோடு தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. தோண்டப்பட்ட பகுதி இன்று வரை சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கூறுகையில், 'பிரதான சாலையாக உள்ளதால், குழியால் சாலை குறுகலாக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலையை சீராக்குவது உடனடித்தேவை' என்றனர்.
22-Nov-2024