உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியில் 12 இடங்களில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் 

மாநகராட்சியில் 12 இடங்களில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் 

திருப்பூர் : சர்வதேச ரோட்டரி நிதியில் அனுமதிக்கப்பட்டு, திருப்பூர் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி சார்பில், குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மாநகராட்சி வழங்கும் இடம், குடிநீர் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்கு பராமரித்து, சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் இலவசமாக வழங்கும் சேவை துவங்க உள்ளது.கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மத்திய பஸ் ஸ்டாண்ட், சந்தைப்பேட்டை, கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, வேலம்பாளையம் பள்ளி உட்பட, 12 இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் துவங்கப்பட உள்ளது.தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம் கூறுகையில்,''தலா, ஐந்து லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டப்பணி நடக்கும்.திருப்பூர் தெற்கு ரோட்டரி நிதி, 80 சதவீதம், சர்வதேச ரோட்டரி மானியம் 20 சதவீதத்துடன் இந்த சேவை அளிக்கப்படும். கடந்த ஓராண்டில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 700க்கும் அதிகமான பணிகளை செய்துள்ளோம்.இம்மாத இறுதிக்குள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ