உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பண பரிவர்த்தனைக்கு க்யூஆர் கோடு

 பண பரிவர்த்தனைக்கு க்யூஆர் கோடு

திருப்பூர்: தபால்துறை ஊழியர்கள் எடுத்துச் செல்லும் பணம், பறக்கும் படை சோதனையில் பிடிபடும் போது ஒப்புதல் கடிதம் அளிக்கும் நடைமுறை மாற்றப்பட்டு, 'க்யூஆர் கோடு' ஸ்கேனராக மாற்றப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ந்தாலும், தபால் நிலையங்களில் இன்றளவும் டிபாசிட் தொகை ரொக்கமாகவும் பெறப்படுகிறது. மாநிலம் முழுதும், தபால் நிலையங்களில் தினமும் டிபாசிட் செய்யப்படும் சேமிப்புத் தொகை குறிப்பிட்ட கால இடைவெளியில், தலைமை தபால் நிலையங்களுக்கு தபால் அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பபடும் தொகை பறக்கும் படையினரால் வானக சோதனையின் போது, பறிமுதல் செய்யப்படும் போது, பணம் கொண்டு செல்லப்படும் ஒப்புதல் கடிதத்தை காண்பித்து, தபால் அலுவலர்கள் தடையின்றி பணத்தை கொண்டு சென்றனர்; தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. பணம் கொண்டு செல்லும் தபால் அலுவலர்கள் வசம் பணம் எங்கிருந்து எங்கு எடுத்து செல்லப்படுகிறது, எவ்வளவு தொகை, எந்த தபால் நிலையம், பொறுப்பு அதிகாரி குறித்த விபரங்கள் அடங்கிய 'க்யூஆர் கோடு'-ஐ பணியில் இருக்கும் தபால் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, இந்த க்யூஆர் கோடு இவர்கள் காண்பிப்பர். ஸ்கேன் செய்தால், விபரம் தெரிய வரும். ஸ்கேன் செய்த விபரம், 'லோக்கேஷன்' உடனடியாக கோட்ட அளவிலான தலைமை கண்காணிப்பாளர்களுக்கு சென்று சேரும். ஒரு வேளை பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அது குறித்த தகவலும் முழுமையாக, தபால் கோட்ட கண்காணிப்பாளருக்கு அறிந்து கொள்ள முடியும். இப்பணிகளை ஒருங்கிணைக்க ஏதுவாக மாநிலம் முழுதும் உள்ள, 45 தபால் கோட்ட கண்காணிப்பாளர்கள் தபால் பண பரிவர்த்தனை கண்காணிப்புக்கான நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ