மேலும் செய்திகள்
ஒரே இரவில் 3 இடங்களில் 83 ஆயிரம் திருட்டு
07-Aug-2025
திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோடு, சந்திராபுரத்தில் முனியப்பன், 35 என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். காலை கடைக்கு சென்ற போது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த, 30 ஆயிரம் ரூபாய், 12 சிகரெட் பாக்கெட்கள் திருடு போனது தெரிந்தது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். மங்கலம் ரோடு, கருவம்பாளையம் - பூச்சக்காட்டில் பார்த்திபன், 40 என்பவரின் கடையில், 10 ஆயிரம் ரூபாய், அடுத்த வீதியான செங்குந்த புரத்தில் துரை, 51 என்பவரின் கடையில், 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது சென்டரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Aug-2025