உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்டாசு வெடித்து தீ:  உயிர் தப்பிய முயல்கள்

பட்டாசு வெடித்து தீ:  உயிர் தப்பிய முயல்கள்

திருப்பூர்: ராக்கெட் பட்டாசு விழுந்து முயல் பண்ணையில் தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக முயல்கள் உயிர் பிழைத்தன. திருப்பூர், ஓடக்காடு பகுதியில் தீபாவளியை முன்னிட்டு, சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவர்கள் கொளுத்திய ராக்கெட் பட்டாசு ஒன்று அங்குள்ள கூரை வேய்ந்த கொட்டகை மீது விழுந்தது. அதில், முயல் பண்ணை செயல்பட்டு வந்தது. அதன் கூரையில் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வடக்கு தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து, தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த முயல்கள் உயிர் பிழைத்தன. l திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியில் அதே போல் உயரத்தில் பறந்து சென்ற ராக்கெட் பட்டாசு, அங்குள்ள தென்னை மரத்தின் மீது விழுந்து தீப்பிடித்தது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் பிடித்த தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ