உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேக்ளா பந்தயம் சீறிய காளைகள்

ரேக்ளா பந்தயம் சீறிய காளைகள்

பல்லடம்; முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பல்லடம் நகர தி.மு.க., சார்பில், ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது. இதில், காளைகள் சீறிப்பாய்ந்தன.பல்லடம் - பொள்ளாச்சி பழைய பைபாஸ் ரோட்டில் நடந்த ரேக்ளா பந்தயத்துக்கு, பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.திருப்பூர், பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, மூலனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 400க்கும் அதிகமான ரேக்ளா வாகனங்கள் பந்தயத்தில் பங்கேற்றன. குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடந்த முதல் மூன்று ரேக்ளா வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கி, காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை