சந்தை முன் மழை நீர் தேக்கம் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
உடுமலை; உழவர் சந்தை முன் தேங்கி நிற்கும் மழை நீரால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து உழவர் சந்தை வழியாக செல்லும் ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில், உழவர் சந்தை முன் பல நாட்களாக மழை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. ரோடு இருப்பதே தெரியாத அளவுக்கு தண்ணீர் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை. தண்ணீர் தெறிப்பதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.அருகிலுள்ள சாக்கடை கழிவு நீரும், மழை நீருடன் கலந்து தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.