ரேஷன் அரிசி பறிமுதல்
- நமது நிருபர் -திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கணபதிபாளையம், பெரியதோட்டத்தில் கண்காணித்தனர்.நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த விமல்ராஜ், 23, பதுக்கிய, 1.6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சிங்கனுார், பெத்தாம்பாளையம், புதுப்பாளையம் மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, வடமாநிலத்தினருக்கு விற்றது தெரிந்தது. அவரிடம் அரிசி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.