உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினமும் நாளிதழ் வாசியுங்கள்: சைலேந்திரபாபு அறிவுரை

தினமும் நாளிதழ் வாசியுங்கள்: சைலேந்திரபாபு அறிவுரை

பல்லடம்; கரடிவாவி எஸ்.எல்.என்.எம்., மேல்நிலைப்பள்ளியில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, தேசிய கொடியேற்றி வைத்து பேசியதாவது: நாம் எந்த ஒரு செயலை செய்ய வேண்டுமானாலும், அதற்கு மன மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வாசிக்கும் ஆர்வம் இருந்தால், எதையும் சாதிக்கலாம். தமிழக மக்களின் ஒட்டுமொத்த வருமானம், பாகிஸ்தான் நாட்டு வருமானத்தை விட அதிகம். உலகில் கல்வி, செல்வம் பெரியது. ஆனால், சுதந்திரம், இதையெல்லாம் விட மிகப்பெரியது. மொபைல் போன், சினிமா என, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். வகுப்பறையில் கற்பது தான் வருமானத்துக்கு வழிவகுக்கும். ஆங்கிலம் தெரிந்தால் உலகில் எங்கும் போகலாம். அறிவியலுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் அறிவார்ந்தவர்களாக மாற வேண்டும். தினசரி, ஒரு மணி நேரமாவது நாளிதழ் படியுங்கள். உங்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். மாணவர்களான நீங்கள் ஆராய்ச்சியாளராக மாறுங்கள். உலக வர்த்தகம், பொருளாதாரம் தெரியாவிட்டால், நமக்கும் காட்டுவாசிகளுக்கும் வித்தியாசம் இல்லை. எனவே, தமிழகம் மட்டுமன்றி, தேசிய, சர்வதேச நிகழ்வுகளை அன்றாடம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, தினசரி நாளிதழ் படிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ