புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்கள் சென்றன
திருப்பூர்; 'பெஞ்சல்' புயலால் வெள்ள பாதிப்புக்கு உள்ளான, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களுக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மூன்று கன்டெய்னர் நிவாரண பொருட்கள் நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டது.நிவாரண பொருள் ஏற்றப்பட்ட, மூன்று கன்டெய்னர் லாரிகளில் பயணத்தை, காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்வழி, கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் நான்கு லாரி கன்டெய்னருக்கான பொருட்களை பிரித்து பேக்கிங் செய்யும் பணி திருப்பூர், பல்லடம் ரோடு, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில், வருவாய்த்துறை சார்பில் நடந்து வருகிறது.கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில்,' வெள்ளம் பாதித்த மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு வழங்க, அரிசி, பருப்பு, மஞ்சள், கடுகு, ரவை, உப்பு, சாம்பார் துாள் உள்ளிட்ட, 11 பொருட்கள் குடும்பத்துக்கு அளவாக பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. நேற்று மூன்று கன்டெய்னர் சென்ற நிலையில், நாளை இன்று மேலும் நான்கு கன்டெய்னர்களில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்,' என்றார்.