உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நான்கு ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றுங்க

நான்கு ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றுங்க

உடுமலை; பிரதான ரோடுகள் இணையும், ஜல்லிபட்டி நால் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரவுண்டானா அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலையிலிருந்து, திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் மூணாறு என சுற்றுலா தலங்களுக்கும், கிராமங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக, ஜல்லிபட்டி நான்கு ரோடு அமைந்துள்ளது. சுற்றுலா வாகனங்கள், பஸ்கள், பயணியர் வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு இயக்கப்படும் வாகனங்கள் என, வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. ஜல்லிபட்டி கிராமம், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திமலை மற்றும் உடுமலைக்கு வரும் ரோடு என, நான்கு ரோடு சந்திப்பு பகுதி, 80 அடி அகலம் உள்ளது. ஆனால், தற்போது, ரோட்டின் இரு புறமும் ஆக்கிரமிப்புகளால், ரோடு குறுகலாக மாறி, 20 அடிரோடு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம், பயன்படுத்தப்படாமலும், ஆக்கிரமிப்பிலும் உள்ளது. இதனால், இப்பகுதியில் நிரந்தர போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், எளிதாக வாகனங்கள் செல்லும் வகையிலும், விபத்துக்களை தடுக்கும் வகையிலும், ரோடுகளின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, ரோட்டை முழுமையாக அகலப்படுத்த வேண்டும். மேலும், ரோடு சந்திப்புகளில் வாகனங்கள் எளிதாக கடக்கும் வகையிலும், நெரிசல் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும். அதே போல், நான்கு ரோடுகளிலும்,மையத்தடுப்புகள் அமைக்கவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை