உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ நாச்சம்மாள் பள்ளியில் குடியரசு தின விழா 

ஸ்ரீ நாச்சம்மாள் பள்ளியில் குடியரசு தின விழா 

திருப்பூர்; அவிநாசி, ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி, குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் மீனாட்சி விநாயகம் தேசியக்கொடியேற்றினார். 'யூனிட்டி கப்' எனும் தலைப்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் அடங்கிய, 24 குழுக்கள் பங்கேற்றன. பள்ளியின் தாளாளர் விநாயகம்,' பெற்றோர் தம் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்,' எனக்கூறி, போட்டிகளிலும் பங்கேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ