குடியரசு தின சிலம்பம்; மாணவர்கள் அசத்தல்
திருப்பூர்; மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில், குடியரசு தின விழா மற்றும் பாரதியார் தின விழா புதிய விளையாட்டு போட்டிகள், 2024-2025 நடத்தப்பட்டது.இதில், 17 முதல், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், இரட்டை கம்புவீச்சு போட்டியில் கோல்டன் நகர், முத்தமிழ் சிலம்ப பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி, 11ம் வகுப்பு மாணவன் சுபிக்ஷன், மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தார்.பெண்கள் பிரிவில், ஜெய்வாபாய் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு மணவி தனு யாழினி, சிலம்பம் கம்புச்சண்டையில் தொடுபுள்ளிகள் முறை போட்டியில், மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை திருப்பூர் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் மகேந்திரன், பயிற்சியாளர் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.