கூடுதல் போனஸ் கோரிக்கை
திருப்பூர்: தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு கூட்டம், மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. பொது செயலாளர் பீட்டர் ரமேஷ்குமார், பொருளாளர் கமலா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.திருப்பூரில், பின்னலாடை மற்றும் குறு, சிறு வியாபார தலங்கள், நகைக்கடை, கட்டட தொழில், மரவேலை, சாலை மற்றும் துப்புரவு பணியாளர் உட்பட, அனைத்து தொழிலாளர்களுக்கும், கடந்தாண்டை காட்டிலும், 5 சதவீதம் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும்.வெளிமாவட்ட தொழிலாளர், சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடுவது வழக்கம். அரசு மற்றும் தனியார் பஸ்களை அதிக அளவு இயக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.