தாலுகா தோறும் இன்ஜினியர் கூட்டுறவு பணியாளர் கோரிக்கை
திருப்பூர்: தடையின்றி ரேஷன் பொருள் வினியோகிக்க ஏதுவாக, தாலுகா தோறும் இன்ஜினியர்கள் நியமிக்கப்பட வேண்டுமென, கூட்டுறவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) மாவட்ட தலைவர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சில தாலுகாக்களில், ரேஷன் கடை விற்பனை கருவிக்கான இன்ஜினியர்கள் இல்லை. 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை பயன்படுத்தும் போது, நெட்வொர்க் பிரச்னை, டிவைஸ் பழுதாகும் போது, விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர். இன்ஜினியர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.இதன் காரணமாக, ரேஷன் பொருட்கள் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. விற்பனையாளர் மற்றும் கார்டுதாரர் இடையே வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது.எனவே, அனைத்து தாலுகாவுக்கும், இன்ஜினியர்களை நியமனம் செய்து, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை தடையின்றி பயன்படுத்த உதவ, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.